1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 14 டிசம்பர் 2024 (15:29 IST)

தென் மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 200 மி.மீ.க்கும் மேல் மழைப்பொழிவு! பெருகெடுத்து ஓடும் வெள்ளம்..!

Floods
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 200 மில்லி மீட்டருக்கு மேல் மழை பொழிந்துள்ளது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 200 மில்லி மீட்டருக்கு மேல் மழை பொழிவு பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் 50 ஆயிரம் கன அடி அளவுக்கு தண்ணீர் சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும், குற்றாலத்தில் அருவிகளிலும் நீர் பெருக்கு அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஆற்றின் கரையோரத்தில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாறிக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், வங்கக் கடலில் மேலும் ஒரு புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் டிசம்பர் 16 முதல் மீண்டும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 
 
Edited by Mahendran