1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 27 ஜனவரி 2020 (20:46 IST)

13 வயது சிறுமியின் வயிற்றில் இதுவா? அதிர்ச்சியில் டாக்டர்கள்!

கோவையில் 13 வயது சிறுமி வயிற்றில் அரை கிலோ தலைமுடி, ஷாம்பு பாக்கெட்டுகள் இருந்ததை பார்த்து டாக்டர்களை அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
கோவையைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்தார். அவர் எதை சாப்பிட்டாலும் அவருக்கு வாந்தி வந்துகொண்டு கொண்டிருந்ததாக அவரது பெற்றோர்கள் மருத்துவரிடம் தெரிவித்தனர். மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது அவரது சிறுகுடலில் ஒரு கட்டி இருப்பது போல் தெரிந்தது. ஆனால் அந்த கட்டி என்ன? தெளிவாக தெரியவில்லை
 
இதனை அடுத்து எண்டாஸ்கோப் எடுத்துப் பார்த்தபோது தலைமுடி அதிக அளவில் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். அறுவை சிகிச்சையின் போது அரை கிலோ அளவிற்கு தலைமுடி மற்றும் ஷாம்பு பாக்கெட்டுகள் வெளிய எடுக்கப்பட்டன. இதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் 
 
சிறுமி மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவர் கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து வாயில் போட்டு விழுங்கி இருந்ததாகவும் இதனால் அவரது வயிற்றில் அரை கிலோ அளவிற்கு தலைமுடி ஷாம்பு பாக்கெட் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சேர்ந்துவிட்டதாகவும், இதனை அடுத்து பெற்றோர்கள் அவரை இனிமேலாவது கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது