ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (17:54 IST)

பொருளாதாரத்தை சீர்குலைத்த குற்றவாளி ப சிதம்பரம் தான்..ஹெச்.ராஜா ஆவேசம்

பொருளாதாரத்தை சீர்குலைத்த முதல் குற்றவாளி ப சிதம்பரம் தான் என ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

பொருளாதார மந்தநிலை குறித்து பாஜகவையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் பலர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டையில் ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா, ஊழலில் ஈடுபட்ட ப சிதம்பரத்திற்கு ஆதரவாக ராகுல் காந்தி பேசியிருப்பது வேதனையளிக்கிறது, மேலும் நாட்டில் உள்ள வங்கிகளையும், பொருளாதாரத்தையும் சீர்குலைத்த முதல் குற்றவாளி ப சிதம்பரம் தான் என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இத்தனை வருடங்கள், வங்கி பணத்தை சூறையாடியது காங்கிரஸ் கட்சிதான் எனவும் ஆவேசமாக பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் மீது ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு, ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு ஆகிய வழக்குகள் பதியப்பட்டன. இதில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால் சிபிஐ அதிகாரிகளால் சிறை வைக்கப்பட்டு, பின்பு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி உயர்நீதிமன்றத்திலும் ப சிதம்பரம் தாக்கல் செயத ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.