1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 4 அக்டோபர் 2023 (21:36 IST)

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு -அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் 10,359 பேர் பணியில் உள்ள நிலையில், அவர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறையில் இசை, ஓவியம், தையல், உடற்பயிற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளில்,  பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த போதும் இவர்களுக்கு இத்தனை ஆண்டு காலம், பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

கடந்த தேர்தலில், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று வாக்குறுதி கொடுத்திருந்தது.  ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கடந்தும், பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து, சென்னையில் பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்,
இவர்களுக்கு ஆதரவாக, பாஜக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவளித்துள்ளன.

இந்த நிலையில் பகுதி நேர ஆசிரியர்கள் 10,359 பேர் பணியில் உள்ள நிலையில், அவர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

சமவேலை சம ஊதியம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டு 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும், ஆசிரியர்கள் இதை ஏற்று பணிக்குத் திரும்ப வேண்டும் என  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.