தேமுதிகவுக்கு குட்பை சொன்ன மாவட்டச் செயலாளார்
தென்சென்னை மாவட்ட தேமுதிக செயலாளர் வி.என்.ராஜன், அக்கட்சியில் இருந்து விலகினார்.
தென்சென்னை மாவட்ட தேமுதிக செயலாளராக இருப்பவர் வி.என்.ராஜன். இவர் அந்தக்கட்சியில் இருந்து விலகினார். பின்பு, சென்னையில், அண்ணா அறிவாலயத்தில், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தார்.
இதுவரை தேமுதிகவைச் சேர்ந்த 19 மாவட்ட செயலாளர்கள் திமுகவில் இணைந்துள்ளது குறிப்பிட தக்கது. மேலும், வரும் 17 ஆம் தேதி மக்கள் தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் திமுகவில் இணைய உள்ளனர் குறிப்பிடதக்கது.