ரூ.400 குறைந்த தங்கம் - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.34,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் குறித்து தினசரி பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உச்சத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் இன்று திடீரென கிராம் ஒன்றுக்கு ரூபாய் 400 குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.34,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.4,365க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 காசு உயர்ந்து ரூ.65.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.