1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 8 மே 2021 (08:13 IST)

இன்று முதல் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்: எந்தெந்த பேருந்துகளில் பயணம் செய்யலாம்?

இன்று முதல் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்
இன்று முதல் அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பு பெண்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
நேற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்ற முக ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது 
 
இன்று காலை முதல் அரசு மற்றும் நகரப் பேருந்துகளில் உள்ள ஒயிட் போர்டு பேருந்துகளில் பணிபுரியும் பெண்கள், உயர்கல்வி பயிலும் பெண்கள் உள்பட அனைத்து பெண்களும் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம். ஆனால் அதே நேரத்தில் டீலக்ஸ் உள்பட மற்ற பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொலைதூர பேருந்துகளிலும் இலவச பயணத்திற்கு அனுமதி கிடையாது 
 
சென்னை மாநகரத்தில் உள்ள அரசு நகரப் பேருந்து உள்பட அனைத்து பகுதியில் உள்ள நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். இதற்காக எந்தவிதமான அடையாள அட்டையையும் நடத்துனரிடம் பெண்கள் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த திட்டத்திற்கு தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ 1200 கோடி செலவாகும் என்றும், இதனால் போக்குவரத்து கழகத்துக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டி மானியமாக அரசு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது