செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 6 ஜூன் 2024 (10:53 IST)

மருதமலை வனப்பகுதிக்கு கொண்டு வரப்பட்ட குட்டி யானை தாயுடன் சேர்க்கும் முயற்சி-வனத்துறை தகவல்!

கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக 40 வயது மதிக்கத்தக்க காட்டு யானை உடல்நிலை பாதிக்கப்பட்டு பின்னர் வனத்துறையினர் அதனை கண்டறிந்து மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டு பின்னர் நலமடைந்து நேற்று முன்தினம் வனப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது
 
அதன் அருகே இருந்த குட்டி யானை திடீரென காணாமல் போனதால் நான்கு குழு அமைத்து வனத்துறையினர் பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர் இந்நிலையில் காலை தொண்டாமுத்தூர் அடுத்த விராலியூர் பச்சாம்பதி என்ற பகுதியில் குட்டியானையை கண்டறிந்து அழைத்து மருதமலை வனப் பகுதியில் உள்ள யானை மடுவு என்ற பகுதிக்கு கொண்டுவரப்பட்டது காட்டு அணையின் தாய் யானை அதே பகுதியில் முகாம் வீட்டில் இருப்பதால் தொடர்ந்து இரண்டு யானைகளையும் ஒன்று சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது அதே நேரத்தில் நான்கு மாத குட்டி யானை என்பதால் வனத்துறையினர் அதற்கு புட்டியில் பால் கொடுத்து வருகின்றனர்.
 
பினனர் அருகில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் குடிக்க வைத்து  குட்டி யானையை கண்காணித்து வந்தனர் அதேபோல கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக உடல்நிலை பாதிக்கப்பட்ட காட்டு யானை தற்போது ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாக இருப்பதால் இரண்டையும் இணைப்பதற்காக குட்டியானையை யானை மடுவு எந்த இடத்திற்கு கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டது அப்போது தாயானை அப்பகுதிக்கு வந்து தொடர்ந்து குட்டி அணையை மோப்பம் செய்து வருகிறது கிட்டத்தட்ட குட்டி யானை 100 மீட்டர் அருகில் தான் தற்போது தாய் யானை உள்ளதால் கண்டிப்பாக இரண்டு யானையும் இணைந்து அடர்ந்த வனப் பகுதிக்கு செல்லும் என்று வனத்துறையினர் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.
 
தற்போது இந்த பணிக்காக கால்நடை மருத்துவக் குழு இயற்கை ஆர்வலர்கள் மற்றும் வனத்துறை முப்பதுக்கு மேற்பட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் 
 
குட்டி யானை  வனத்
துறையினரிடையே பாசப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது