திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 17 அக்டோபர் 2016 (14:18 IST)

பொதுமக்களுக்கு எச்சரிக்கை! - 2 மடங்காக உயரும் ஆம்னி பஸ் கட்டணம்

தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆம்னி பஸ்களில் கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 

 
தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டது. இதனால் வழக்கத்தை விட 2 மடங்கு அதிகமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முறை பெருங்களத்தூரில் ஆம்னி பஸ்கள் நிற்காது.
 
ஆம்னி பஸ் உரிமையாளர்களே கட்டணத்தை உயர்த்திவிட்ட நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் பிரச்சனை வராது. அந்த அளவுக்கு அனைவருக்கும் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளோம்.
 
அறிவிக்கப்பட்டுள்ளதை விட கூடுதலாக கட்டணம் வசூலித்தால் அரசு நடவடிக்கை எடுக்கும். இதில் சங்கம் தலையிடாது என்று நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
 
மேலும், கரண்ட் புக்கிங் ரத்து செய்யப்பட்டு விட்டது.மாறாக ஆன்லைன் புக்கிங் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளனர்.
 
 
புதிய கட்டண உயர்வு  (சென்னையிலிருந்து) :
 
ஊட்டி, கொடைக்கானல் - ரூ. 950,
கொல்லம், எர்ணாகுளம் - ரூ. 1200,
பெங்களூர் நான் ஏசி - ரூ. 770,
சேலம், நாகை, வேளாங்கண்ணி, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டனம், திருவாரூர் - ரூ. 750,
காரைக்குடி, சிவகங்கை அறந்தாங்கி - ரூ. 790,
சிவகாசி, கம்பம், தேனி, போடி, பெரியகுளம் - ரூ. 935,
நாகர்கோவில், தென்காசி, திருச்செந்தூர், தூத்துக்குடி - ரூ. 950, மதுரை, கோவை, திருப்பூர் - ரூ. 880,
திண்டுக்கல் - ரூ. 790.