செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 12 ஜூன் 2023 (08:42 IST)

10ம் வகுப்பு கூட படிக்காதவர்களுக்கு வெளிநாட்டில் வேலை.. போலி பாஸ்பார்ட் தயாரித்த கும்பல் கைது..!

10ம் வகுப்பு கூட படிக்காதவர்களுக்கு வெளிநாட்டில் வேலை பெற உதவியாக போலி பாஸ்பார்ட், விசா தயாரித்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் முக்கிய தரகர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
 
பத்தாம் வகுப்பு கூட படிக்காத நபர்களை போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பியது அம்பலமாகி உள்ளது.  10ம் வகுப்பு படித்து முடிக்காதவர்கள் வெளிநாட்டுக்கு செல்ல, மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சக அனுமதி அவசியம் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் மும்பை, டெல்லி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் போலி அலுவலகங்கள் அமைத்து போலி பாஸ்போர்ட், விசா தயாரித்த கும்பல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த கும்பல் யூடியூப் மூலமாக மாட்டிக்கொள்ளாமல் போலி பாஸ்போர்ட் தயாரித்ததாக விசாரணையில் தரகர் வாக்குமூலம் அளித்துள்ளார். போலி பாஸ்பார்ட்டால் வெளிநாட்டில் வேலைக்கு சேர்ந்தவர்களிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.
 
Edited by Siva