புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 12 பிப்ரவரி 2018 (05:47 IST)

என்னை நடிக்க சொன்னது யார்? சரண் அடைந்த போலி அதிகாரியின் திடுக் வாக்குமூலம்

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரி போல் நாடகமாடிய மர்ம நபரை கடந்த இரண்டு நாட்களாக போலீசார் தேடி வந்த நிலையில் நேற்றிரவு அவர் மாம்பலம் போலீசில் சரண் அடைந்தார். பிரபு என்ற பெயரை கொண்ட அந்த நபர் போலீஸ் விசாரணையின்போது தன்னை வருமான வரித்துறை அதிகாரி போல் நடிக்க சொன்னது தீபாவின் கணவர் மாதவன் தான் என்ற உண்மையை போட்டு உடைத்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் தன்னை திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக கூறி மாதவன் தான் தனக்கு போலி ஐடி அதிகாரி அடையாள அட்டையை அனுப்பி வைத்ததாகவும் விசாரணையின்போது கூறியுள்ளார்.

ஏற்கனவே போலீஸ் விசாரணையின்போது தனக்கு வருமான வரித்துறை அதிகாரி வந்தபோது எந்த சந்தேகமும் எழவில்லை என்று மாதவன் கூறியிருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இதுகுறித்து மாதவனிடம் போலீசார் விசாரணை செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்