வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 24 அக்டோபர் 2017 (10:53 IST)

கந்துவட்டி கொடுமையா? இதோ புகார் எண்: ஈரோடு கலெக்டர் அறிவிப்பு

நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளித்தது. இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இனிமேல் கந்துவட்டி குறித்த புகார்களுக்கு தனி தொலைபேசி எண் அறிவிக்கப்படும் என நெல்லை கலெக்டர் கூறியிருந்தார்.



 
 
இந்த நிலையில் நெல்லை கலெக்டர் கூறியதை சற்று முன்னர் ஈரோடு கலெக்டர் அறிவிப்பாகவே அறிவித்துவிட்டார். ஆம் ஈரோடு மாவட்டத்தில் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள்  0424- 2260211 மற்றும் 7806917007 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் சற்றுமுன் அறிவித்துள்ளார்.
 
ஈரோடு மாவட்டத்தில் நெசவாளர்கள் அதிகளவில் கந்துவட்டியால் பாதிக்கபப்ட்டிருப்பதாகவும், தமிழகத்தில் இனி ஒரு உயிர் கூட கந்துவட்டியால் இழக்கக்கூடாது என்றும் ஈரோடு சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். மேலும் ஈரோடு ஆட்சியருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.