1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2017 (10:49 IST)

எதிர்கட்சி தலைவர்தான் அப்டீனா..முதலமைச்சரும் இப்படியா? - கலாய்க்கும் நெட்டிசன்கள்

கம்பராமாயணம் பற்றி முதல்வரும், குடியரசு நாள் தேதி குறித்து மு.க.ஸ்டாலினும் தவறுதலாக குறிப்பிட்டு பேசிய விவகாரம்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக வலம் வருகிறது.


 
சில நாட்களுக்கு முன்பு நெல்லையில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின் ‘முன்பெல்லாம் ஜனவரி 25ம் தேதி குடியரசு தினத்திலும், ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திர தினத்திலும் ஆளுநரே தேசியக்கொடியை ஏற்றி வந்தனர். கலைஞர் வாதாடிப் பேசி, ஆகஸ்டு 15ம் தேதி மாநில முதல்வர்களும், ஜனவரி 25ம் தேதி குடியரசு தினத்தில் ஆளுநரும் கொடியேற்றும் நடைமுறை வழக்கத்திற்கு வந்தது’எனப் பேசினார். அதாவது, ஜனவரி 26 என்பதிற்கு பதில் தவறாக ஜனவரி 25ம் தேதி எனக் கூறியிருந்தார்.


 

 
அதேபோல், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய போது, கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் எனப்பேசினார். கம்பராமாயணத்தை எழுதிய கம்பர் என சிறு பள்ளிக்குழந்தைகள் கூட கூறும் நிலையில், மாநில முதல்வர் இப்படியா பேசுவது எனவும், குடியரசு தினத்தின் தேதி கூட ஸ்டாலினுக்கு தெரியாதா? எனவும் கேள்வி எழுப்பி நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.