என்ஜினீயரிங் சேர மே 3 ஆம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம் - விண்ணப்பிக்க மே 20 ஆம் தேதி கடைசி நாள்

வீரமணி பன்னீர்செல்வம்| Last Updated: வெள்ளி, 25 ஏப்ரல் 2014 (12:53 IST)
என்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப படிவம் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 59 மையங்களில் மே 3 ஆம் தேதி முதல் வினியோகிக்கப்பட உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 20 ஆம் தேதி கடைசி நாள்.
தமிழ்நாட்டில் அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் சேர்த்து மொத்தம் 620 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை 2 விதமாக நடைபெற உள்ளது. அதாவது மாணவர் சேர்க்கை இடங்களில் அரசு இடஒதுக்கீட்டு இடங்கள் என்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
 
ஒவ்வொரு கல்லூரியில் உள்ள இடங்களில் 65 சதவீதத்தை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் (அரசு ஒதுக்கீட்டுக்கு) கலந்தாய்வுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளாக இருந்தால் அவர்கள் 50 சதவீத இடங்களைத்தான் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வுக்கு கொடுக்க வேண்டும்.
 
பொதுவான கல்லூரிகள் மீதம் உள்ள 35 சதவீத இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக அழைக்கப்படுகிறது. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கையை அந்தந்த கல்லூரிகளே நிரப்பிக்கொள்ளாலாம். அண்ணா பல்கலைக்கழகம் நடத்தம் மாணவர் சேர்க்கைதான் பெரிய அளவிலானதாகும்.


இதில் மேலும் படிக்கவும் :