திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (12:33 IST)

சென்னையின் பிரபல ரவுடி நெல்லையில் என்கவுண்டர்!

பிரபல ரவுடி நீராவி முருகனை காவலர்கள் என்கவுண்டரில் சுட்டு வீழ்த்தினர்.
 
தூத்துக்குடி புதியம்புத்தூர் நீராவி மேட்டை சேர்ந்த முருகன் என்ற நீராவி முருகன் மீது மூன்று கொலை மற்றும்  தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இந்நிலையில் ஒட்டன்சத்திரம் கொலை வழக்கு சம்பந்தமாக திண்டுக்கல் தனிப்படையினர் இவரை தேடி வந்தனர். 
 
ஆனால், அவரை தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து நெல்லையில் சுற்றி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு விரைந்து சென்று நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து களக்காடு செல்லும் வழியில் ரவுடி நீராவி முருகன் சுற்றிவளைத்த திண்டுக்கல் தனிப்படை சுட்டு வீழ்த்தியது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.