செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 10 நவம்பர் 2016 (08:45 IST)

தஞ்சையில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!

தஞ்சையில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்த மூன்று தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.


 
 
இந்நிலையில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக இன்று முதல் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று தேர்தல் ஆணையம் தஞ்சையில் நடத்திய தேடுதல் வேட்டையில் ரூ.7.85 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
 
பறிமுதல் செய்த பணம் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் என தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதிய ரூபாய் நோட்டுகள் அரசால் விநியோகிக்க தொடங்கும் முன்னர் நேற்றே கைப்பற்றப்பட்டது பல சந்தேகங்களை எழுப்பியது.
 
இதனையடுத்து உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணம் ஆர்.டி.ஓ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பணம் பாங்க் ஆஃப் பரோடா வங்கிக்கு சொந்தமானது என கூறப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு என குறிப்பிட்ட ராஜேஷ் லக்கானி உரிய ஆவணங்கள் இருப்பதால் விசாரணைக்கு பின்னர் அந்த பணம் ஒப்படைக்கப்படும் என கூறினார்.