1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 16 அக்டோபர் 2024 (18:12 IST)

ஓபிஎஸ், சசிகலா மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படுவார்களா? ஈபிஎஸ் பதில்..!

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மற்றும் ஓ. பன்னீர்செல்வத்தை மீண்டும் இணைக்க எந்த வாய்ப்பும் இல்லை என்று தெளிவாக அறிவித்துள்ளார். 
 
மேலும் மேற்கண்ட இருவருடன் ரகசியமாக தொடர்பு கொண்டு செயல்படும்வர்களை கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும், பா.ஜ.க. ஆதரவாளர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்காணித்து வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி கட்சித் தொண்டர்களுக்காக எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 
 
வான் போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு" என்று திருக்குறளை குறிப்பிட்டு, வெளிப்படையான பகைவர்களை அஞ்ச வேண்டியதில்லை, ஆனால் நண்பர்களாக இருந்து உள்ளதாக காட்டி உட்பகை கொள்பவர்களை அஞ்சவேண்டும் என வள்ளுவர் நமக்குக் கூறுகிறார். கட்சிக்குத் தேவையற்றவர்களை உட்பகை கொண்டு செயல்பட்டால், அவர்கள் கட்சியில் நீக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
 
பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, எடப்பாடி பழனிசாமி இப்படியான கடிதம் எழுதி கட்சி உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது இது முதன்முறையாகும். மேலும், மாவட்ட அளவில் தலைமை தாங்கிய சில முன்னாள் அமைச்சர்களை திடீரென நீக்கியதும் கட்சி வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran