வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 2 ஏப்ரல் 2017 (11:22 IST)

சசிகலா படம் போட்டு ஓட்டு கேட்டால் வெற்றி கிடைக்காது: உளறிய எடப்பாடி பழனிச்சாமி!

சசிகலா படம் போட்டு ஓட்டு கேட்டால் வெற்றி கிடைக்காது: உளறிய எடப்பாடி பழனிச்சாமி!

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் சசிகலா அணியை சேர்ந்த டிடிவி தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுகவின் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மதுசூதனனும் இரட்டை மின்விளக்கு சின்னத்தில் போட்டியிடுகிறார்.


 
 
இரு அணியினர் வெற்றி பெற வேண்டும் என தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் டிடிவி தினகரன் தனது பிரச்சாரத்திலும் சரி போஸ்டர்களிலும் சரி சசிகலா படம் மற்றும் புகைப்படத்தை புறக்கணித்து வருகிறார்.
 
சசிகலாவுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருவதால் அவரது புகைப்படத்தை டிடிவி தினகரன் பயன்படுத்தினால் அவருக்கு ஓட்டு கிடைக்காது எனவே சசிகலா புகைப்படத்தை டிடிவி தினகரன் புறக்கணித்து வருவதாக பரவலாக பேசப்பட்டது.
 
ஓபிஎஸ் அணியினரும் இதனை வைத்து பிரச்சாரம் செய்து வந்தனர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த செய்தியாளர் சந்திப்பில் சசிகலா படத்தை போட்டு ஓட்டு கேட்டால் வெற்றி பெற முடியாது என்பதை ஒப்புக்கொள்வதை போன்று உளறி விட்டார்.
 
ஆர்கே நகர் தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமியிடம், சசிகலா படத்தை வைத்து ஏன் பிரசாரம் செய்யவில்லை என்று ஓபிஎஸ் அணியினர் கூறி வருகிறார்களே? என கேள்வி எழுப்பினர் செய்தியாளர்கள்.
 
இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, என்ன வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ அதை வைத்து நாங்கள் பிரசாரம் செய்கிறோம் என்றார் சிறிதும் யோசிக்காமல். அதாவது சசிகலா படத்தை போட்டு ஓட்டு கேட்டால் வெற்றி பெற முடியாது என்பதைத்தான் மறைமுகமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே கூறிவிட்டார் என பேசப்படுகிறது.