திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (13:32 IST)

என்னை விட கோபக்காரரா இருக்காரே.. மகனை நினைத்து வருந்துகிறாரா வைகோ?

vaiko son
நான் கோபப்பட்டு உணர்ச்சிவசப்பட்டதால் தான் அரசியலில் பல நல்ல வாய்ப்புகளை இழந்தேன், ஆனால் என் மகன் என்னை விட கோபக்காரராக இருக்கிறார் என்று வைகோ தனது நெருக்கமானவர்களிடம் புலம்பியதாக கூறப்படுகிறது. 
 
குறிப்பாக வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் துரை வைகோ, கொஞ்சம் ஓவராக பேசிவிட்டதை வைகோவே ரசிக்கவில்லை என்றும் அது மட்டும் இன்றி தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்கள் எல்லாம் அடிக்கடி கோபித்துக் கொண்டு காருக்குள் உட்கார்ந்து கொள்வதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
 மேலும் மதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் துரை வைகோ,  பங்கேற்கவில்லை என்றும் வளரும் ஒரு அரசியல்வாதிக்கு இது அழகல்ல என்று வைகோ, சுட்டிக்காட்டியும் கூட அவர் விடாப்பிடியாக தனது இஷ்டப்படி செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
அதிகம் உணர்ச்சி வசப்பட்டதால் தான் அரசியலில் நான் நிறைய இழந்து விட்டேன், இவர் என்னை விட உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறார் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் வைகோ கூறி புலம்பியதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
 
Edited by Mahendran