திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

தொடர் மழை எதிரொலி: பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு!

schools
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சென்னை உள்பட ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருவதையடுத்து சில பகுதிகளுக்கு மட்டும் பள்ளிகள் விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட ஒரு சில பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
குறிப்பாக சென்னையில் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரன் பானு ரெட்டி என்பவர் அறிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து வேறு சில பகுதிகளிலும் பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது