ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 10 மார்ச் 2024 (10:08 IST)

போதை பொருள் விவகாரம்.! தமிழக ஆளுநருடன் எடப்பாடி இன்று சந்திப்பு.!!

Eps Governor
தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,   தமிழக  ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்து புகார் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில், பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். திமுகவைச் சேர்ந்த ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தல் விவாகரத்தில் முக்கிய புள்ளியாக இருந்தது தெரிய வந்ததை அடுத்து, திமுகவில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
 
இதனிடையே தமிழ்நாட்டில் போதை பொருள் விவகாரத்தில் ஆளும் கட்சி நிர்வாகிகள் ஈடுபடுவதாக கூறி, அண்மையில் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது என்றும்  தமிழகத்தை சேர்ந்த ஒருவர் போதைப்பொருள் கடத்தி கைதாகி உள்ளது ஒட்டுமொத்த தமிழகத்திற்குமே தலைகுனிவு தான் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

 
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, எடப்பாடி பழனிச்சாமி இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  திமுக ஆட்சியில் போதைப் பொருள் அதிகரித்து வருவது தொடர்பாக ஆளுநரிடம் எடப்பாடி மனு அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.