1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 7 நவம்பர் 2020 (18:11 IST)

வங்கி ஊழியர்கள் தந்த நெருக்கடி: தேனி கார் ஓட்டுனர் தற்கொலை

வங்கிகளிடம் கடன் வாங்கியவர்கள் குறிப்பாக தனியார் வங்கிகளிடம் கடன் வாங்கியவர்கள் வங்கி ஊழியர்களால் மிரட்டப் படுகிறார்கள் என்றும் அதனால் பலர் தற்கொலை செய்துகொண்டிருப்பதுமான செய்திகளை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் தேனியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஒருவர் வங்கியில் கடன் வாங்கி இருந்த நிலையில் வங்கி ஊழியர்கள் கொடுத்த நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் இருந்தவர் தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் முருகன். இவர் வங்கி ஒன்றில் கடன் வாங்கி இருந்த நிலையில் அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் இருந்துள்ளார்.
 
இந்த நிலையில் வங்கி ஊழியர்கள் வீட்டிற்கு வந்து தந்த நெருக்கடி காரணமாக அவமானம் அடைந்த முருகன் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
ஓட்டுநர் முருகனை முருகனுக்கு நெருக்கடி தந்த வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் காவல் துறையிடம் கோரிக்கை விடுத்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.