1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 5 ஏப்ரல் 2017 (11:46 IST)

குள்ளநரி ஓபிஎஸ்: விளாசும் டாக்டர் நமது எம்ஜிஆர்!

குள்ளநரி ஓபிஎஸ்: விளாசும் டாக்டர் நமது எம்ஜிஆர்!

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான டாக்டர் நமது எம்ஜிஆர் தற்போது சசிகலா அணியினரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அதில் ஓபிஎஸுக்கு எதிராகவும் தினகரனுக்கு ஆதரவாகவும் செய்திகள், கட்டுரைகள் வெளிவருகின்றன.


 
 
இந்நிலையில் ஓபிஎஸுக்கு மத்திய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதை விமர்சித்து டாக்டர் நமது எம்ஜிஆரில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பாஜகவையும், ஓபிஎஸையும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
 
ஒய் செக்யூரிட்டி ஒய்? என்ற தலைப்பில் புனைப்பெயரில் அந்த கட்டுரை வெளிவந்துள்ளது. அதில், ஓபுஎஸுக்கு ஒய் செக்யூரிட்டி வழங்கியிருப்பது தேவையில்லாதது. சங்பரிவார் தலைவர்கள், ஆர்எஸ்எஸ் மற்றும் அது தொடர்பான குழுக்களை சேர்ந்தவர்களுக்கு ஒய், இசட் பிரிவு பாதுகாப்பை வழங்கி வந்த மத்திய அரசு ஓபிஎஸுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பை வழங்கியிருப்பது அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அங்கம் என்பதை காட்டுகிறது.
 
இதன்மூலம் ஒரு குள்ளநரிக்கு ஆயுதமேந்திய காவலர்களின் பாதுகாப்பை வழங்கி பாஜக கண்காணிப்பது உறுதியாகியுள்ளது. ஓபிஎஸ் என்ன பெரிய மகானா, தனது பலகோடி சொத்துக்களை மக்களுக்கு எழுதி கொடுத்தவரா. அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு தேவையில்லாதது என டாக்டர் நமது எம்ஜிஆர் கடுமையாக சாடியுள்ளது.