செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 20 நவம்பர் 2018 (10:42 IST)

ஆம்பூரில் நாய்க்கறி பிரியாணி: தெறித்து ஓடிய மக்கள்

ஆம்பூரில் ஆட்டுக்கறியுடன்  நாய்க்கறியை சேர்த்து பிரியாணி தயாரித்து விற்ற வாலிபர்களை போலீஸார்  கைது செய்தனர்.
சமீபத்தில் சென்னை எழும்பூரில் கைப்பற்றப்பட்ட 2000 கிலோ நாய்க்கறியால் தமிழகமெங்கும் ஆட்டுக்கறி விற்பனை பெரும் சரிவை சந்தித்துள்ளது. அதேபோல் ஓட்டல் கடைகளில் பிரியாணி விற்பனையும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. மக்கள் கடைகளில் அசைவ உணவுகளை சாப்பிடுவதற்கே பயப்படுகின்றனர்.
 
இந்நிலையில் ஆம்பூரில் கடை ஒன்றில் மலிவு விலைக்கு மட்டன் பிரியாணி விற்பனை செய்யப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டனர். எனினும் அவர்கள் விற்பனை செய்யும் பிரியாணியில் சந்தேகித்த சிலர் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
 
இதையடுத்து போலீஸார் அந்த பிரியாணி கடைக்கு சென்று, பிரியாணி சமைக்கும் இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். அங்கு ஆட்டுக்கறியுடன் நாய்க்கறி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் அந்த கடையை நடத்தி வந்த வாலிபர்களை கைது செய்தனர். இச்சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.