வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 4 ஜூலை 2018 (17:52 IST)

எஜமானை காப்பாற்ற மின்கம்பியை கடித்து உயிரைவிட்ட நாய்

மதுரை உசிலம்பட்டியில் மின்சாரம் தாக்கிய எஜமானை காப்பற்ற முயன்ற நாய் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
மதுரை உசிலம்பட்டியில் உள்ள கல்கொண்டான்பட்டியில் பெய்த கனமழையால் மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. நேற்று காலை மின்கம்பிகள் அறுந்த விழுந்த வழியாக மாடு ஒன்று சென்று சிக்கியது.
 
இதைக்கண்ட முதியவர் ஒருவர் மாட்டினைக் காப்பாற்ற முயற்சித்துள்ளார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. முதியவர் மீது மின்சாரம் தாக்கியதை கண்ட அவர் வளர்த்த நாய் முதியவரை காப்பாற்ற மின்கம்பியை கடித்து இழுத்துள்ளது.
 
இதில் மாடு, முதியவர் மற்றும் அவரது நாய் என மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
இதையடுத்து உயிரிழந்த முதியவரின் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.