1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வெள்ளி, 16 டிசம்பர் 2016 (14:06 IST)

ஜெயலலிதாவின் இரத்த குழாயை சேதப்படுத்திய மருத்துவர்: அவசரத்தில் நிகழ்ந்த தவறு!

ஜெயலலிதாவின் இரத்த குழாயை சேதப்படுத்திய மருத்துவர்: அவசரத்தில் நிகழ்ந்த தவறு!

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்நிலையில் பிரபல தமிழ் வார இதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கும்படியாக உள்ளது.


 
 
அந்த பிரபல தமிழ் வார இதழ் தனது இணையதளத்தில் ஜெயலலிதாவின் மரணம் பற்றி கூறியுள்ளதாவது, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது என்பதை அப்பல்லோ மருத்துவர்கள் சிலர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
அவர்கள் கூறுகையில், ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது ஒரு நர்ஸ் சொன்ன பின்பு தான் மருத்துவர்களுக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. அதனால் ஜெயலலிதாவை காப்பாற்ற உதவும் முக்கியமான கோல்டன் டைம் என்று கூறப்படும் அந்த 10 நிமிடமும் வீணாகிவிட்டதாக கூறப்படுகிறது.
 
அவருக்கு மூக்கு வழியாக உணவுக் குழாயும், தொண்டை வழியாக செயற்கை சுவாச கருவி இணைக்கப்பட்டிருந்ததால், தனக்கு ஏற்பட்ட இதய பாதிப்பை ஜெயலலிதாவால் சொல்ல முடியாமல் அவர் துடிதுடித்தாகவும். 10 நிமிடம் கழித்து தான் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்ற மருத்துவர்கள் அவரது உயிரை காக்க போராடியதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
பின்னர் உடனடியாக ஜெயலலிதாவை எக்மோ என்ற இயந்திரத்தில் இணைக்க முயற்சி செய்த போது, மூத்த மருத்துவர் ஒருவர் ஜெயலலிதாவின் இரத்தக் குழாய் ஒன்றை அவசரத்தில் சேதப்படுத்திவிட்டாராம், அதனால் ஜெயலலிதாவுக்கு ஏராளமான இரத்தங்கள் வீணாகியதோடு மட்டுமில்லாமல், அதை சமாளிக்க அப்பல்லோவின் மருத்துவ ரத்த வங்கியில் இருந்து புதிய இரத்தம் கொண்டு வந்து ஜெயலலிதாவுக்கு ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
 
இது போன்ற தவறுகளால் ஜெயலலிதாவின் உடல்நிலை சரி செய்ய முடியாத நிலைமைக்கு சென்று விட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது.