திமுக பிரமுகர் குடும்பத்துடன் தற்கொலை


Abimukatheesh| Last Modified சனி, 18 ஜூன் 2016 (04:20 IST)
திண்டிவனம் அருகே சாப்பாட்டில் விஷம் கலந்து திமுக பிரமுகர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சர்க்கார் தோப்பு பகுதியைச் சேர்ந்த பொன்குமார்(45) திமுக. பிரமுகர் புறங்கரை ஊராட்சியின் முன்னாள் தலைவர். தற்போது அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சுமதி(40). இவர்களுக்கு தீனா(25) என்ற மகனும், சண்முகபிரியா(16) என்ற மகளும் இருந்தனர்.
 
தீனா வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் வீட்டில் உள்ள 4 பேரும் சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது. சண்முகபிரியாவும், தீனாவும், கதவை திறந்து கொண்டு வெளியே வந்து மயங்கி விழுந்தனர்.
 
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவர்களை திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விட்டு வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பொன்குமாரும், சுமதியும் மயங்கி கிடந்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். 
 
இதுகுறித்து திண்டிவனம் காவல் துறையினர் பொன்குமார் குடும்பத்தினர் சாப்பாட்டில் விஷம் கலந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதுகிறார்கள்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :