1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : ஞாயிறு, 7 ஜனவரி 2024 (11:55 IST)

ஒரு சீட் கூட உறுதியில்லையா? மக்கள் நீதி மய்யம் அதிர்ச்சி..!

திமுக கூட்டணியில் தங்களுக்கு ஒரு சீட் கிடைக்கும் என மக்கள் நீதி மய்யம் கட்சி நம்பிக்கையுடன் இருந்த நிலையில் தற்போது அந்த ஒரு சீட் கூட உறுதி இல்லை என்று கூறப்படுவதால் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.  
 
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பெரும் தொகுதியோடு சேர்த்து கமல்ஹாசனுக்கும் ஒரு தொகுதி கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் திமுக, காங்கிரஸ் கட்சிக்கே ஐந்து தொகுதிகள் தான் கொடுக்கும் என்பதால் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தொகுதி கொடுப்பது குறித்து இன்னும் பேச்சு வார்த்தையை நடத்தப்படவில்லை என்று தெரிகிறது.  
 
மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக 30 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் மற்ற கட்சிகளுக்கு ஒரு தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ஐந்து தொகுதியும் கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
மக்கள் நீதி மய்யம் கட்சியை விட பெரிய கட்சிகளுக்கு ஒரு தொகுதி கொடுக்கப்படும் போது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு தொகுதி கொடுப்பது என்பது  இயலாத காரியம் என்று தான் திமுக தலைமை கூறி வருவதாகவும் தெரிகிறது. 
 
எனவே காங்கிரஸ் தங்களுக்கு கிடைக்கும் ஒரு தொகுதியில் தான் கமல்ஹாசனுக்கு ஒரு தொகுதி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran