வெள்ளி, 14 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Updated : திங்கள், 25 ஜூலை 2016 (13:14 IST)

சொன்னதை மீறிய ஸ்டாலின் - சட்டப்பேரவையில் திமுக வெளிநடப்பு

சொன்னதை மீறிய ஸ்டாலின் - சட்டப்பேரவையில் திமுக வெளிநடப்பு

சட்டப்பேரவையில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.


 


சில நாட்களுக்கு முன்பு ஸ்டாலின் "எக்காரணம் கொண்டும் இனி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ய மாட்டோம்" என்று கூறி இருந்தார். இந்நிலையில், இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில்,  அதிமுக கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன் பேசும் போது திமுக தலைவர் கருணாநிதி என குறிப்பிட்டார், இதற்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து, சபாநாயகரிடம் நரசிம்மன் பேசியதை அவைகுறிப்பில் இருந்து நீக்க கோரினார். ஆனால் சபாநாயகர், “மரியாதை கருதி முதலமைச்சர் பெயரை மட்டும் தான் சட்டப்பேரவையில் குறிப்பிட கூடாது” என்று கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். இதை கண்டித்து, திமுக, காங்கிரஸ் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.