ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 27 ஜூலை 2018 (06:06 IST)

கருணாநிதியின் உடல்நலம்: நள்ளிரவிலும் குவிந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள்

திமுக தலைவராக கருணாநிதி பொறுப்பேற்று இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த மகிழ்ச்சியான கொண்டாட்டத்தை திமுக தொண்டர்கள் கொண்டாடி வரும் நிலையில் அவருடைய உடல்நலம் குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
நேற்று நள்ளிரவு முதலே கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டின் முன் திமுக தொண்டர்கள் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
 
திமுக தலைவர் கருணாநிதியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி உள்பட ஒருசில அமைச்சர்கள் நேரில் சென்று பார்த்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் கோபாலபுரம் சென்றார். அவர் மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். 
 
மேலும் திமுக தலைவர் கருணாநிதியை நடிகர் சரத்குமார்,  கே.பாலகிருஷ்ணன், ஜி.கே.வாசன், ஞானதேசிகன் உள்ளிட்டோர் சந்திக்க வருகை தந்தனர். இன்று கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி சென்னை வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமாக வேண்டுவதாக டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.