செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2017 (13:33 IST)

ஒரே நாளில் ஓபிஎஸ்-ஐ தோற்கடித்த தினகரன்!

ஒரே நாளில் ஓபிஎஸ்-ஐ தோற்கடித்த தினகரன்!

அதிமுக ஏற்கனவே ஓபிஎஸ் அணி, எடப்பாடி பழனிச்சாமி அணி என இரண்டு அணியாக இருந்தது. ஓபிஎஸ் அணிக்கு 12 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது அதிமுகவில் தினகரன் அணி உருவாகி மூன்றாக பிளவு பட்டுள்ளது.


 
 
அதிமுகவில் இருந்து தினகரனை ஒதுக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டதையடுத்து தினகரனை அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சந்தித்து வருகின்றனர். தினகரனும் தன்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என கூறியுள்ளார். இந்நிலையில் தினகரனுக்கு ஆதரவான எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன.
 
நேற்று வரை தினகரனை 11 எம்எல்ஏக்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். ஆனால் இன்று மேலும் 8 எம்எல்ஏக்கள் சந்தித்துள்ளனர். இதன் மூலம் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் பலம் 19-ஆக உயர்ந்துள்ளது.
 
நீண்ட நாட்களாக சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வரும் ஓபிஎஸ் அணிக்கு 12 எம்எல்ஏக்கள் தான் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் தினகரனுக்கு இரண்டே நாட்களில் 19 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அதிமுக எம்எல்ஏக்கள் மத்தியில் ஓபிஎஸ்ஸை விட தினகரனுக்கு ஆதரவு அதிகமாகவுள்ளது தெரியவருகிறது.