திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 5 செப்டம்பர் 2022 (08:49 IST)

சென்னையில் திடீர் டீசல் தட்டுப்பாடு: டீசல் இல்லை என்ற பெயர்ப்பலகையால் அதிர்ச்சி!

Diesel
சென்னையில் திடீரென டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் டீசல் இல்லை என்ற பெயர்ப்பலகை பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை கடந்த 100 நாட்களுக்கும் மேலாக உயராமல் இருப்பது வாகன ஓட்டிகள் பெரும் நிம்மதியை அளித்தாலும் திடீரென சென்னையில் பல்வேறு பகுதிகளில் டீசல் தட்டுப்பாடு என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னையில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் டீசல் இல்லை என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது தற்காலிகமானது என்றும் விரைவில் சென்னையில் டீசல் தட்டுப்பாடு இருக்காது என்றும் பெட்ரோல் நிலைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்