வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 11 ஜனவரி 2017 (13:43 IST)

ஜல்லிக்கட்டுக்காக தடையை மீறுவது தவறில்லை

ஜல்லிக்கட்டு அவவரச் சட்டம் கொண்டுவராத பட்சத்தில் தடையை மீறுவதில் தவறில்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


 

 
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. ஏற்கனவே அரசியல் கட்சித்தலைவர்கள் சிலர் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்தனர்.
 
இன்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்காட்டு உறுதியாக நடத்தப்படும் என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது அறிக்கை விமர்சனம் செய்து, மத்திய அரசு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது என்று குறிப்பிட்டார்.
 
இந்நிலையில் அன்புமணி ராமதாஸ், ஜல்லிக்கட்டு அவவரச் சட்டம் கொண்டுவராத பட்சத்தில் தடையை மீறுவதில் தவறில்லை என்று தெரிவித்துள்ளார்.