வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 15 மே 2018 (14:19 IST)

தென்னிந்தியா நுழைவுக்கான மணியோசை: பாஜக வெற்றிக்கு ஓபிஎஸ் வாழ்த்து

நடைபெற்று முடிந்த கர்நாடக தேர்தலின் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்து கொண்டிருக்கின்றது. சற்றுமுன் வரை 106 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள பாஜகவுக்கு ஆட்சி அமைக்க தேவையான 112 என்ற எண்ணிக்கைக்கு இன்னும் 6 தொகுதிகள் மட்டுமே தேவை. எனவே பாஜக ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சி அமைக்கவும் வாய்ப்பில்லை என்று கூற முடியாது.
 
இந்த நிலையில் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் பாஜகவின் இந்த வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாஜகவுக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ள ஓபிஎஸ், அதன் பின்னர் கூறியதுதான் ஆச்சரியத்தை வரவழைக்கின்றது.
 
தென்னிந்தியாவில் பிரம்மாண்ட நுழைவிற்கான மணியோசை போல் கர்நாடகாவில் வெற்றி பெற்றமைக்காக வாழ்த்துகிறேன் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். தமிழகத்தில் திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் பாஜக வெற்றி பெறுவதற்கு அவர் வாழ்த்து தெரிவிப்பதுபோல் இந்த கருத்து இருப்பதால் பெரும் சர்ச்சையாகியுள்ளது. மோடியா? லேடியா? என ஜெயலலிதா இருந்த போது பாஜகவுக்கு எதிராக இருந்த அதிமுக, தற்போது முழு அளவில் பாஜகவுக்கு ஜால்ரா அடிப்பதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.