1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : சனி, 29 ஏப்ரல் 2017 (15:27 IST)

தினகரனை தனியறையில் அடைத்துவிட்டு மனைவி அனுராதாவிடம் போலீஸ் கிடுக்குப்பிடி!

தினகரனை தனியறையில் அடைத்துவிட்டு மனைவி அனுராதாவிடம் போலீஸ் கிடுக்குப்பிடி!

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடர்ப்பட்ட வழக்கில் டிடிவி தினகரனை டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கின் விசாரணையில் டெல்லி போலீசார் தினகரனின் மனைவி அனுராதாவிடமும் விசாரணை நடத்தியது மன்னார்குடி குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


 
 
இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் டிடிவி தினகரனை கைது செய்து அவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து சென்னைக்கு அழைத்து வந்தனர் டெல்லி போலீசார்.
 
தினகரனிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரது மனைவி அனுராதாவையும் விட்டு வைக்கவில்லை. காரணம் அனுராதா தான் வெளிநாட்டு முதலீடுகளை கவனித்து வருகிறார். அதனால் போலீசார் அனுராதாவிடம் கிடுக்குப்பிடி விசாரணையை நடத்தினார்.
 
போலீசாரின் கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் அளித்த அனுராதா ஒரு சில கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறினார். இதனால் பதற்றமான தினகரன், சார் பிளீஸ் அவரை விட்டுவிடுங்கள், என்னிடம் எல்லா கேள்விகளையும் கேளுங்காள் என கூறியுள்ளார்.
 
இதனையடுத்து அனுராதாவிடம் விசாரணை நடத்த தடையாக இருந்த தினகரனை தனி அறையில் ஒன்றில் அடைத்து விட்டு அனுராதாவிடம் விசாரணையை தொடர்ந்தனர். இந்த வழக்கில் அனுராதாவும் சிக்குவாறோ என மன்னார்குடி குடும்பம் பதற்றத்தில் உள்ளது.