1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 27 ஜனவரி 2022 (08:59 IST)

தமிழகத்தையே சுற்றி வரும் அணிவகுப்பு ஊர்தி: நிராகரிப்பின் விளைவு...

சென்னை குடியரசு தினவிழாவில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளை தமிழ்நாடு முழுவதும் காட்சிப்படுத்தபடுகிறது. 

 
மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் ஊர்தியின் அணிவகுப்பு சென்னை நடைபெற்றது. இந்த ஊர்தியில் வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கம், குயிலி ஆகியோர் சிலைகள் இடம்பெற்றுள்ளது. 
 
மேலும் விடுதலைக்காக பாடுபட்ட வ.உ.சி, பாரதியார், சுப்பிரமணிய சிவா, ராகவாச்சாரி மற்றும் சுதேசி கப்பலும் காட்சிப்படுத்தப்பட்டது. இதுபோக, தந்தை பெரியார், ராஜாஜி, காமராஜர், தீரன் சின்னமலை உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் கொண்ட ஊர்தியும் அணிவகுக்கப்பட்டது. 
 
இந்நிலையில் சென்னை குடியரசு தினவிழாவில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளை தமிழ்நாடு முழுவதும் காட்சிப்படுத்தபடுகிறது. ஆம், டெல்லி நிராகரிக்கப்பட்ட ஊர்திகளை தமிழகம் முழுவதும் காட்சிப்படுத்த படுகிறது. முதல் கட்டமாக சென்னையில் இருந்து ஈரோடு புறப்பட்டது. முதல்வர் முக.ஸ்டாலின்  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.