வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 5 ஏப்ரல் 2017 (08:56 IST)

தீபாவுக்கு கொலை மிரட்டல்: தேர்தல் ஆணையத்தில் புகார்!

தீபாவுக்கு கொலை மிரட்டல்: தேர்தல் ஆணையத்தில் புகார்!

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


 
 
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அவரது ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 62 வேட்பாளர்கள் களம் இறக்கியுள்ளனர்.
 
இந்த தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளை சேர்ந்த வேட்பாளர்கள், திமுக, தேமுதிக, பாஜக, நாம் தமிழர் கட்சி, இடதுசாரிகள் என பலமுணை போட்டியில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை சேர்ந்த தீபாவும் களம் இறங்கியுள்ளார்.
 
இந்த கடும் போட்டியில் படகு சின்னத்தில் போட்டியிடும் தீபா, நான் வெற்றி பெறுவேன் என கூறி தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் தீபா சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
அந்த புகாரில் தனக்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மர்ம நபர்களால் தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும், தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுமாறும் தொடர்ந்து மிரட்டல் விடுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
ஆனால், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தீபா அளித்துள்ள புகார் அவரது அரசியல் முதிர்ச்சியை காட்டுவதாகவும் இது வெறும் அரசியல் நாடகம் எனவும் மற்ற கட்சியினரால் விமர்சிக்கப்பச்டுகிறது.