புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 18 ஏப்ரல் 2024 (14:28 IST)

24 மணி நேர கெடு முடிந்தது.. எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன் வழக்கு..

எடப்பாடி பழனிசாமி மீது திமுக எம்.பி தயாநிதி மாறன் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில்  தயாநிதி மாறன் வழக்கு தாக்கல் செய்த நிலையில் இந்த வழக்கில் தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என பேசியதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை 95 சதவீதத்துக்கு மேல் தொகுதி நிதியை பயன்படுத்தியுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கோர வேண்டும்  எனக் கூறிய தயாநிதி மாறன், மன்னிப்பு கேட்க 24 மணி நேரம் அவகாசம் கொடுத்த நிலையில் அந்த அவகாசம் முடிந்ததால் தற்போது அவர் சொன்னபடியே வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு குறித்து தயாநிதி மாறன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘மத்திய சென்னை தொகுதி மேம்பாட்டு நிதியை 95% மேல் பயன்படுத்தியுள்ளேன்.  தொகுதி மேம்பாட்டு நிதியை 75%  பயன்படுத்தவில்லை என புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி  பேசியதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார் என்று கூறியுள்ளார்.


Edited by Siva