ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 24 பிப்ரவரி 2018 (10:47 IST)

ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: வயல் நிலத்தில் 3 அடி உயரத்தில் கச்சா எண்ணெய்

திருவாரூர் அருகே கமலாபுரம் என்ற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசி குழாயில் திடீரென  உடைப்பு ஏற்பட்டதால் அதில் இருந்து வெளியேறும் கச்சா எண்ணெய் அப்பகுதியில் உள்ள விளைநிலங்களில் பரவியது

ஒரு ஏக்கர் வயலில் சுமார் சுமார் 3 அடி உயரத்துக்கு கச்சா எண்ணெய் தேங்கியுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். கச்சா எண்ணெய் தேங்கியிருப்பதால் சாகுபடிக்கு தயாராகவுள்ள பயிர்களை சாகுபடி செய்ய இயலாத நிலையில் உள்ளதாகவும், விளைநிலங்களும் பயிர்களும் சேதம் அடைந்துள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் பகுதியில் இவ்வாறு கச்சா எண்ணெய் கசிந்து விளைநிலங்களை சேதப்படுத்துவது இது முதல்முறையல்ல. அடிக்கடி நிகழும் இந்த கசிவுகள் குறித்து பலமுறை புகார் அளித்தும் மத்திய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகள் எடுக்காமல் உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கொத்தெழுந்துள்ளனர்.