1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 29 நவம்பர் 2016 (16:40 IST)

அதிமுக அமைச்சரின் பெயரில் கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனை

தமிழக அமைச்சரின் பெயரை பயன்படுத்தி பணம் பரிவர்த்தனை நடைபெறுவதாக எழுந்த புகாரின் பேரில் 6 பேரிடம் விசாரணை நடத்தியதோடு, ரு. 1.35 கோடியையும் பறிமுதல் செய்துள்ளனர்.


 

கோவையை அடுத்த கோவைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியான கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் கடந்த சில தினங்களாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி தருவதாக தகவல்கள் வெளியாகின.

மேலும், இந்த பண பரிவர்த்தனைகள் அதிமுக அமைச்சரான எஸ்.பி.வேலுமணி பெயரில் நடைபெற்று வருவதாக, அவருடைய சகோதரர் அன்பு அரசு கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் பேரில், வருவாய் வரித்துறை சிறப்புப்படை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கல்லூரி வளாகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கல்லூரி வளாகத்தில் இருந்த வங்கியின் முன்பாக 6 பேர் கொண்ட கும்பல் இரண்டு சொகுசு கார்களில் இருந்துள்ளது.

மேலும், கையில் பையுடன் இருந்துள்ளனர். அப்போது அதிகாரிகள் அவர்களிடம் சோதனை மேற்கொண்டதில் சுமார் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் பணம் அவர்களிடம் இருப்பது தெரிய வந்ததையடுத்து அப்பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் அந்த பணம் முறையான வருமான வரி செலுத்தப்படுத்துள்ளதா எனவும், எதற்காக இப்பணத்தை அங்கு கொண்டு வந்தனர் எனவும் விசாரணை மேற்கொண்டனர். தமிழக அமைச்சர் பெயரை பயன்படுத்தி பணம் பரிவர்த்தணை நடந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.