1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J Durai
Last Modified: வெள்ளி, 13 அக்டோபர் 2023 (14:03 IST)

அறுவடைக்கு தயாரான பயிர்கள்.. மழையால் சேதம்! – நாகப்பட்டிணம் விவசாயிகள் கவலை!

நாகை அருகே அறுவடைக்கு தயாராக இருந்த சுமார்  200 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மழையினால் வயலிலேயே சாய்ந்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்


 
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 62,000 ஏக்கர் பரப்பளவில் குருவை சாகுபடி செய்யப்பட்டுள்ள சூழலில் நீரின்றி சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் கருகி நாசமானது.

இந்நிலையில் எஞ்சிய பயிர்களை விவசாயிகள் டீசல் என்ஜின் கொண்டு நீர் இறைத்து காப்பாற்றிய சூழலில் ஒருசில இடங்களில் அறுவடை பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கீழ்வேளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஒரு வாரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த  பட்டமங்கலம், கிள்ளுக்குடி,சாட்டிக்குடி, கொடியாலத்தூர்,இறையான்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை காரணமாக சுமார்  200 ஏக்கர் அளவிலான விளை நிலங்களில் நெற்கதிர்கள் வயலிலே சாய்ந்துள்ளது.

பள்ளமான ஒரு சில வயல்களை மழை நீர் தேங்கி நெல்மணிகளை சூழ்ந்துள்ளதால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

 காவிரியில் எதிர்பார்த்த நீர் கிடைக்காததால் குருவை சாகுபடி எந்த ஆண்டு பெருமளவில் பாதித்த நிலையில் எஞ்சிய குறுவை பயிர்களும் தற்பொழுது பெய்த மழையினால் வயலிலேயே சாய்ந்துள்ளதால் மகசூல் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

 குறுவை பாதிப்பால் ஏக்கர் ஒன்றுக்கு 10 முதல் 15 மூட்டை கூட கிடைக்காது எனவும் பெரும்பாலான நெல்மணிகள் பதறாக உள்ளதென வேதனை தெரிவிக்கும் விவசாயிகள் தமிழக அரசு உரிய நிவாரண மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.