பாடப்புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ் குறித்து கருத்து – நீக்க சொல்லி நீதிமன்றம் உத்தரவு !
10ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்த கருத்தை நீக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை வடிவமைத்து அச்சடிக்கிறது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இரண்டாம் பருவ பாடப் புத்தகத்தில் பக்கம் எண் 50இல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சுதந்திரத்துக்கு முன்னர் ஆர்.எஸ்.எஸ் முஸ்லீம்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை நீக்கவேண்டும் என ஆர்எஸ்எஸ் அமைப்பின் சென்னை மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு ‘ உடனடியாக சம்மந்தப்பட்ட பகுதியை நீக்கவேண்டும். மேலும் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஸ்டிக்கர் ஒட்டி அதை மறைக்கவேண்டும். இனிவரும் பதிப்புகளில் அந்த வரிகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.