1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (07:19 IST)

கணவரின் உடலை அடக்கம் செய்வது எப்படி? இந்து, முஸ்லிம் மனைவிகள் வழக்கில் அதிரடி உத்தரவு..!

Madurai Court
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசு போக்குவரத்து டிரைவர் சமீபத்தில் காலமான நிலையில் அவரது இந்து மற்றும் முஸ்லிம் மனைவி கணவரின் உடலை அடக்கம் செய்வது குறித்து தாக்கல் செய்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

அரசு போக்குவரத்து கழக டிரைவர் ஆன பாலசுப்பிரமணியம் என்பவர் சாந்தி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து சையத் அலி என்ற முஸ்லிம் பெண்ணையும் திருமணம் செய்து கொண்டார்

 இந்த நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மரணமடைந்த நிலையில் அவரது உடலை தங்கள் வழக்கப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று இரண்டு மனைவிகளும் தங்களிடமே உடலை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் விசாரித்த நிலையில் டிரைவரின் உடலை முதல் மனைவியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் தங்கள் மத படி சடங்குகளை முடித்து அதன் பின்னர் இரண்டாவது மனைவியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இரண்டாவது மனைவியும் தங்கள் மத வழக்கின்படி சடங்கு செய்து அதன் பின்னர் அடக்கம் செய்யலாம் என்றும் வழக்கை முடித்து வைத்தார்

Edited by Siva