வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 10 டிசம்பர் 2020 (16:20 IST)

ஸ்டாலின் மீது தொடரப்பட்ட வழக்கில் நான்கு ரத்து – நீதிமன்றம் தீர்ப்பு!

திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளில் நான்கை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழகத்தின் முதல்வராக  ஜெயலலிதா இருந்தபோது ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 12 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. அதில் ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுக்கிறார் என்று ஸ்டாலின் பேசியது குறித்தும் அவதூறு வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அந்த வழக்குகள் இன்று  விசாரணைக்கு வந்தது. 

அதில் நான்கு வழக்குகளை நீதிமன்றம் ரத்து செய்து மீதமுள்ள வழக்குகளை வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. மேலும் பொது வாழ்வில் உள்ளவர்கள் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும்  உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.