புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (12:54 IST)

வேட்டி கட்டினா மோடி தமிழனா? திருநாவுக்கரசர் காட்டம்!

வேட்டி கட்டியதால் பிரதமர் மோடி தமிழன் ஆகிவிடமாட்டார் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர் எம்பி என தெரிவித்துள்ளார். 
 
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி தமிழ் பாரம்பரியப்படி வேஷ்டி, சண்டை அணிந்து, தோளில் துண்டு போட்டுக்கொண்டு வந்தது பலருக்கு வியப்பை அளித்தது. மோடி வேஷ்டி, சட்டை அணிவது இதுவே முதல்முறையாகும். 
 
எனவே மோடி வேஷ்டி அணிந்ததை அனைவரும் பெருமையாக பேசிவந்த நிலையில் காங்கிரஸ் எம்பி திருநாவுகரசர் இதனை கடுமையாக விமர்சித்துள்ளார். முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவராகவும், தற்போது துருச்சி தொகுதி எம்பியாகவும் உள்ள திருநாவுக்கரசு தெரிவித்தது பின்வருமாறு, 
வேட்டி கட்டியதால் பிரதமர் மோடி தமிழன் ஆகிவிடமாட்டார். ஒரு தலைவன் சாதனைகளால் மக்களை கவர வேண்டும், அதை விட்டுவிட்டு வேஷ்டி, சட்டை மற்றும் துப்புரவி பணி செய்வதன் மூலம் மக்களை கவர கூடாது என தெரிவித்துள்ளார்.