கோவையில் இருந்து கோவா.. தினசரி விமான சேவையை ஆரம்பித்த இண்டிகோ!
கோவையிலிருந்து கோவாவுக்கு தினசரி விமான சேவையை இண்டிகோ விமான நிறுவனம் ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவையிலிருந்து கோவாவுக்கு தினசரி விமான சேவை தொடங்கப்பட வேண்டும் என கோவை மக்கள் ஒரு சில மாதங்களாகவே வேண்டுகோள் விடுத்து வந்தனர்
இந்த நிலையில் இண்டிகோ விமானம் கோவையில் இருந்து தினசரி கோவாவுக்கு தினசரி விமானத்தை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. அக்டோபர் 30-ஆம் தேதி முதல் கோவையிலிருந்து தினசரி வருமானம் கோவாவுக்கு இயங்கும் என்றும் இந்த விமானத்தில் 186 பயணிகள் பயணம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
கோவையில் இருந்து இரவு 11.05 மணிக்கு புறப்படும் இந்த விமானம் கோவாவுக்கு அதிகாலை 12.30 மணிக்கு செல்லும் என்றும் அதே போல் கோவாவிலிருந்து அதிகாலை 1.00 மணிக்கு கிளம்பும் அதிகாலை 2 20 மணிக்கு கோவை வந்து சேரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.