1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 22 செப்டம்பர் 2014 (19:23 IST)

கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் வெற்றி

கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில், பா.ஜ.க.வை விட 2 லட்சத்து 91 ஆயிரத்து 343 ஓட்டுகள் அதிகம் பெற்று அ.தி.மு.க. வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் வெற்றி பெற்றார்.
 
கோவை மாநகராட்சி மேயர் பொறுப்பில் இருந்த செ.ம.வேலுசாமி பதவி விலகியதை தொடர்ந்து மேயர் பதவிக்கான தேர்தல் கடந்த 18 ஆம் தேதி நடந்தது. இதில் 46.53 சதவீத வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக கணபதி ப.ராஜ்குமார், பா.ஜ.க. வேட்பாளராக ஆர்.நந்தகுமார், மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.பத்மநாபன் உள்பட 16 பேர் போட்டியிட்டனர். தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள் போட்டியிடவில்லை.
 
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடந்தது. மொத்தம் 19 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் 4 லட்சத்து 20 ஆயிரத்து 104 ஓட்டுகள் பெற்று, பா.ஜ.க. வேட்பாளரை விட 2 லட்சத்து 91 ஆயிரத்து 343 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.