செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J. Durai
Last Modified: வியாழன், 7 டிசம்பர் 2023 (12:41 IST)

கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் திறப்பு!!

கோவையின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் கோவை குற்றாலத்தில் ஏற்பட்டு இருந்த வெள்ளப் பெருக்கின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது.


தற்பொழுது நீர்வரத்து குறைந்ததால் மீண்டும் திறக்கப்படுவதாக  வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர். கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக பூண்டி, வெள்ளியங்கிரி, கோவை குற்றாலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வந்தது. இதனால்   நீரின் வரத்து அதிகமாகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் தற்போது நீரின் வரத்து குறைந்து இயல்பான நிலைக்கு திரும்பியது. இதனால்  மீண்டும் இன்று முதல் திறக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.