1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Modified: ஞாயிறு, 16 அக்டோபர் 2016 (08:48 IST)

அப்பல்லோவுக்கு வந்த சோ மகன்

தமிழக முதல்வர்ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 25 நாட்களாக சிகிச்சை பெற்றுவருகிறார். இதையடுத்து தமிழக தலைவகள் மட்டுமின்றி மத்திய அமைச்சர்களும் மருத்துவமனைக்கு வருகை புரிந்து முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்துவருகின்றனர். இந்நிலையில்  நேற்று துக்ளக் ஆசிரியர்சோ ராமசாமியின் மகன் கார்த்திக் நேற்று அப்பல்லோ வந்தார்.



பின்னர் மருத்துவர்களை சந்தித்து முதல்வர் உடல் நலம் குறித்து விசாரித்துவிட்டு சென்றார். சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவை அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் கவனித்து வருகின்றனர்.