திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 23 மார்ச் 2017 (21:19 IST)

ஏப்ரல் 12ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு பொது விடுமுறை அறிவிப்பு

ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 12-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



 

 
ஆர்.கே.நகரில் எப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் 16ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 60 பேர் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெற உள்ளது. வேட்பு மனுக்களை திருப்பப் பெற 27 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
 
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 12ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறுவதால் ஆர்.கே.நகர் தொகுதிக்கு மட்டும் தலைமைச் செயலாளர் பொதுவிடுமுறை அறிவித்துள்ளார்.